search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய் சங்கர்"

    அம்பதி ராயுடுவின் சர்ச்சைக்குரிய வகையிலான ‘ட்வீட்’டுக்கு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் சிறப்பான வகையில் பதில் அளித்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வியாழக்கிழமை (மே 30-ந்தேதி) தொடங்குகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் அம்பதி ராயுடுக்குப் பதில் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார்.

    இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் ‘‘பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என மூன்று துறைகளிலும் (3 dimensions) சிறந்து விளங்கக்கூடியவர் என்பதால் விஜய் சங்கரை தேர்வு செய்தோம்’’ என இந்திய தேசிய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் விளக்கம் அளித்திருந்தார்.

    மேலும், ‘‘அம்பதி ராயுடுக்கு போதிய போட்டிகள் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் சரியாக விளையாடவில்லை’’ என்றார். இதை மேற்கோள்காட்டி த்ரீ டைமன்சன் வார்த்தையை சுட்டிக்காட்டும் வகையில் ``உலகக்கோப்பை போட்டிகளைப் பார்ப்பதற்காகப் புதிதாக ‘3டி கிளாஸ்’ ஒரு செட் ஆர்டர் செய்துள்ளேன்" எனக் கிண்டலாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் அம்பதி ராயுடு.



    அம்பதி ராயுடுவின் இந்தப் பதிவு குறித்து தற்போது விஜய் சங்கர் பேசியுள்ளார். தனியார் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர்  இதுகுறித்து கூறுகையில் ‘‘ஒரு கிரிக்கெட்டர் உலகக்கோப்பை போன்ற ஒரு தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை என்றால் எப்படி உணருவார்கள் என்பது எனக்குத் தெரியும்.

    ஒரு வீரரின் பார்வையில் அந்த வலி எனக்குப் புரியும். அதே நேரம் ராயுடு என்னைக் குறிவைத்து அப்படி டுவீட் செய்யவில்லை என்பதும் தெரியும். அந்த நேரத்தில் அவரின் உணர்ச்சியை வெளிப்படுத்த அந்த டுவீட்டை போட்டிருப்பார். அப்போது அவர் என்ன சூழ்நிலையில் இருந்திருப்பார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது’’ என்றார்.
    கலீல் அகமது வீசிய பந்து விஜய் சங்கர் கையை பலமாக தாக்கியது. இதில் அவருக்கு முறிவு ஏதும் ஏற்படவில்லை என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. நேற்று முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்த்து விளையாடியது. நேற்று முன்தினம் இந்த போட்டிக்கான வலைப்பயிற்சியில் விஜய் சங்கர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது கலீல் அகமது வீசிய பவுன்சர் பந்து விஜய் சங்கரின் வலது கையை (Forearm) பலமாக தாக்கியது.

    இதனால் அவர் வலியால் துடித்தார். அவர் கையில் எழும்பு முறிவு ஏற்பட்டிருக்குமோ? என்ற அச்சம் நிலவியது. இதனால் உடனடியாக ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்படவில்லை என்று தெரியவந்தது.



    இதனால் உலகக்கோப்பைக்கான அணியில் தொடர்ந்து நீடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் விளையாடவில்லை. 28-ந்தேதி வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் விளையாட வாய்ப்புள்ளது.
    உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஒரு குவாலிட்டி வேகப்பந்து வீச்சாளர் குறைவு என கவுதம் காம்பிர் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்காக 10 அணிகளும் தங்களை தயார்படுத்தி வருகிறது.

    உலகக்கோப்பையை வெல்வதற்கு சாதகமான அணிகள் ஒன்றாக இந்தியா கருதப்படுகிறது. இந்திய அணியில் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகிய குவாலிட்டி வேகப்பந்து வீச்சாளர்களும் ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர் ஆகிய வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களும் உள்ளனர்.

    இந்நிலையில், இந்தியாவுக்கு கூடுதலாக ஒரு குவாலிட்டி வேகப்பந்து வீச்சாளர் தேவை என முன்னாள் இந்திய வீரர் கவுதம் காம்பிர் தனது கவலையை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஒரு குவாலிட்டி வேகப்பந்து வீச்சாளர் குறைவு என நினைக்கிறேன். பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு உதவியான இன்னொருவர் தேவை. நாம் இரண்டு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர் ஆகியோரை கொண்டுள்ளோம் என்று நீங்கள் வாதம் செய்யலாம், ஆனால், என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.



    ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும் என்பதால் இது சிறந்த தொடராக இருக்கும். இது நமக்கும் உண்மையிலேயே சிறந்த உலகக்கோப்பை சாம்பியனை வெளிப்படுத்தும். வருங்காலத்திலும் ஐசிசி இந்த முறையை கடைபிடிக்க வேண்டும்’’ என்றார்.
    உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியில், தேர்வுக்குழு மீது அம்பதி ராயுடு கடுமையாக சாடியுள்ளார். #TeamIndia
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

    இதில் மிடில் ஆர்டர் வரிசையில் விளையாடி வந்த அம்பதி ராயுடுக்கு இடம் கிடைக்கவில்லை. சமீப காலமாக அவர் சொதப்பி வந்ததால் இடம் கிடைக்கவில்லை. மேலும், விஜய் சங்கர் மூன்று பிரிவிலும் (பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங்) சிறந்து விளங்குவதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்று இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் விளக்கம் அளித்திருந்தார். விஜய் சங்கர் குறித்து ஆங்கிலத்தில் ‘‘Vijay Shankar offers is three dimension’’ என்று குறிப்பிட்டிருந்தார்.



    இந்நிலையில் தனக்கு இடம் கிடைக்காத விரக்தியில் அம்பதி ராயுடு தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘உலகக்கோப்பை போட்டியை பார்க்க நான் புதிய செட் 3டி கண்ணாடிகளுக்கு ஆர்டர் செய்துள்ளேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    2-வது டி20 போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது. ரோகித் சர்மா, மார்கண்டே, உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு தவான், சித்தார்த் கவுல், விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளனர். #INDvAUS
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் இன்றிரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் ரோகித் சர்மா, மார்கண்டே, உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு தவான், விஜய் சங்கர், சித்தார்த் கவுல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    இந்திய கிரிக்கெட் நிர்வாகம் என்னை 3-வது இடத்தில் களமிறங்கி பேட்டிங் செய்ய சொன்னது மிகப்பெரிய வியப்பாக இருந்தது என்று விஜய் சங்கர் தெரிவித்துள்ளார். #NZvIND
    இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான விஜய் சங்கர் மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆனார். அதன்பின் இந்தியா விளையாடிய ஐந்து போட்டிகளில் மூன்றில் பங்கேற்றார். நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்று டி20 போட்டிகளிலும் விளையாடினார்.

    நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விஜய் சங்கர் 3-வது பேட்ஸ்மேனாக களம் இறக்கப்பட்டார். அந்த இடத்தில் அவர் சிறப்பாக விளையாடினார். முதல் போட்டியில் 23 ரன்கள் அடித்த அவர், கடைசி போட்டியில் 28 பந்தில் 43 ரன்கள் விளாசி அனைவரது பார்வையையும் ஈர்த்தார்.

    இந்நிலையில் இந்தியா திரும்பியுள்ள அவர், அணி நிர்வாகம் 3-வது இடத்தில் களம் இறக்கியது மிகப்பெரிய வியப்பாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விஜய் சங்கர் கூறுகையில் ‘‘அணி நிர்வாகம் என்னை 3-வது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்யுங்கள் என்று கூறியது மிகப்பெரிய வியப்பாக இருந்தது. சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தபடி விளையாடுவதில் கவனம் செலுத்தினேன். இந்தியா போன்ற அணிக்காக விளையாடும்போது, எல்லா விதங்களிலும் விளையாட தயாராக இருக்க வேண்டும்.

    ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர் முழுவதில் இருந்து அதிக அளவில் கற்றுக் கொண்டேன். நான் அதிக அளவில் பந்து வீசவில்லை. ஆனால், வித்தியாசமான சூழ்நிலைகளில் பந்து வீச கற்றுக் கொண்டேன். விராட் கோலி, ரோகித் சர்மா, டோனி எப்படி பேட்டிங் செய்கிறார்கள் என்பதை பார்த்தேன். அதில் இருந்து பலவற்றை கற்றுக் கொண்டேன்.



    என்னைப் பொறுத்தவரையில் கடைசி போட்டி கூட கற்றுக் கொள்வதற்கான அனுபவம்தான். இன்னொரு பவுண்டரியை விட ஒன்று அல்லது இரண்டு ரன்களுக்கு முயற்சி செய்திருக்கனும். நான் எப்போதும் இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க வேண்டும் என்றுதான் விரும்பிவேன். அணிக்காக என்னால் வெற்றியை தேடிக்கொடுக்க முடியும் என்றால், தானாகவே அது என்னுடைய தனிப்பட்ட ஆட்டத்தை வளர்க்கும்.

    என்னைப் பொறுத்தவரைக்கும், முக்கியமான விஷயம், வித்தியாசமான சூழ்நிலைக்கு ஏற்ப விரைவாக மாறி தொடர்ச்சியாக ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான்’’ என்றார்.
    உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க ரிஷப் பந்த், விஜய் சங்கர், ரகானே ஆகியோர் கடும் போட்டியில் உள்ளனர் என தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். #WorldCup
    12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்து நடக்கிறது. இந்தப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற போகும் வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

    இந்த நிலையில் உலகக்கோப்பை அணியில் இடம்பிடிக்க ரி‌ஷப் பந்த், விஜய் சங்கர், ரகானே ஆகியோர் கடும் போட்டியில் உள்ளனர் என்று தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    அணிகளை தேர்வு செய்ய ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) விதித்துள்ள கடைசி தேதியான ஏப்ரல் 23-ந்தேதிக்குள் 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்ய வேண்டிய நிலைமை தேர்வு குழுவுக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்திய அணியில் 4-வது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்வது யார் என்பதுதான் இதுவரை முடிவு செய்யவில்லை. மற்ற அனைத்து இடத்திற்கான வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று இந்திய அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க ரி‌ஷப் பந்த், விஜய் சங்கர், ரகானே ஆகியோர் கடும் போட்டியில் உள்ளனர்.



    ரி‌ஷப் பந்தின் ஆட்டம் கடந்த ஒரு ஆண்டாகவே மிகவும் சிறப்பாக உள்ளது. அவர் தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளார். 3 நிலை போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுகிறார். விஜய் சங்கர் பேட்டிங் ஆல்ரவுன்டர் வரிசையில் இருக்கிறார்.

    நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் சிறப்பாக ஆடினார். ரகானே உள்ளூர் போட்டியில் சிறப்பாக ஆடி வருகிறார். இந்த 3 பேரும் உலககோப்பை அணியில் இடம்பிடிக்க கடும் போட்டியில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா 5 முறையும், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா 2 முறையும் கைப்பற்றியுள்ளன. பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா 1 முறையும் வென்றுள்ளன.
    வெலிங்டனில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 139-ல் சுருண்டு 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. #NZvIND
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது.

    பின்னர் 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரோகித் சர்மா 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    அடுத்து தவான் உடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்தியா 5.2 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. அணியின் ஸ்கோர் 51 ரன்னாக இருக்கும்போது தவான் 28 பந்தில் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    விஜய் சங்கர் 18 பந்தில் 27 ரன்கள் சேர்த்து வெளியேறினார். அதன்பின் இந்தியாவின் விக்கெட்டுக்கள் சரிய ஆரம்பித்தது. ரிஷப் பந்த் 4 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 5 ரன்னிலும், ஹர்திக் பாண்டியா 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியாவின் தோல்வி உறுதியானது.

    டோனி 31 பந்தில் 39 ரன்களும், குருணால் பாண்டியா 18 பந்தில் 20 ரன்களும் அடிக்க இந்தியா 19.2 ஓவரில் 139 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும் பெர்குசன், சான்ட்னெர், சோதி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் 8-ந்தேதி நடக்கிறது.
    மெல்போர்னில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீசி வருகிறது. ஆடும் லெவனில் தமிழக வீரர் விஜய் சங்கர் இடம்பெற்றுள்ளார். #AUSvIND #TeamIndia #VijayShankar
    மெல்போர்ன்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒரு நாள் போட்டித் தொடரில் சிட்னியில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 34 ரன்னில் வென்றது. அடிலெய்டில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற சமநிலையில் இருக்கிறது.

    இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன், பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில், அம்பத்தி ராயுடு, முகம்மது சிராஜ், குல்தீப் யாதவ் கழற்றி விடப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர், கேதர் ஜாதவ், சேஹல் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.



    இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்களின் விவரம்:-

    இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்) கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ஜடேஜா, புவனேஷ்வர்குமார், முகம்மது சமி, யுஸ்வேந்திர சாஹல்

    ஆஸ்திரேலியா: அலெக்ஸ் காரி (விக்கெட் கீப்பர்) ஆரோன் பிஞ்ச் (கேப்டன்) உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், ரிச்சர்ட்சன், பில்லி ஸ்டான்லேக், பீட்டர் சிடில், ஆடம் ஜம்பா,

    கடந்த போட்டியை போலவே இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர்.  #AUSvIND #TeamIndia #VijayShankar
    இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுலுக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கரும் ஷுப்மான் கில்லும் சேர்க்கப்பட்டுள்ளனர். #TeamIndia #VijayShankar
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் அணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் இருவரும் நாடு திரும்பினர்.

    இந்நிலையில், அணியில் இருந்து நீக்கப்பட்ட இரண்டு வீரர்களுக்கு பதில், தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கரும், ஷுப்மான் கில்லும் அணியில்  சேர்க்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் நடந்த ரஞ்சி போட்டிகளில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


    விஜய் சங்கர் ஏற்கனவே, இலங்கையில் நடந்த முத்தரப்பு தொடரில் பங்கேற்றுள்ளார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான விஜய் சங்கர் (வயது 27), ஐந்து டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

    தற்போது அணியில் சேர்க்கப்பட்டுள்ள விஜய் சங்கரும், ஷுப்மான் கில்லும் ஆஸ்திரேலிய தொடரைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. #TeamIndia #VijayShankar
    ரஞ்சி டிராபியின் 6-வது சுற்று போட்டியில் தமிழ்நாடு பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது. #RanjiTrophy
    ரஞ்சி டிராபி தொடரில் தமிழ்நாடு அணி தனது 6-வது சுற்று போட்டியில் பங்ஞாப் அணியை எதிர்கொண்டது. கடந்த 14-ந்தேதி தொடங்கிய இந்த ஆட்டம் இன்றுவரை நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்தது.

    கோனி (5), பால்டெஜ் சிங் (3) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் தமிழ்நாடு அணி 215 ரன்னில் சுருண்டது. பின்னர் பஞ்சாப் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இளம் வீரரான ஷுப்மான் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 328 பந்தில் 29 பவுண்டரி, 4 சிக்சருடன் 268 ரன்கள் குவித்தார். இவரது ஆட்டத்தால் பஞ்சாப் அணி 479 ரன்கள் குவித்தது. தமிழ் நாடு அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் 107 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    264 ரன்கள் பின்தங்கிய தமிழ் நாடு அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் தமிழ்நாடு 3 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்திருந்தது. பாபா இந்திரஜித் 37 ரன்னுடனும், சாய் கிஷோர் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. பாபா இந்திரஜித் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சாய் கிஷோர் 9 ரன்னில் வெளியேறினார்.

    விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் 175 பந்துகள் சந்தித்து 74 ரன்கள் சேர்த்தார். விஜய் சங்கர் 80 பந்தில் 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருக்க கடைசி நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. ஆட்டம் முடியும்போது தமிழ் நாடு 121 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 383 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் ஆட்டம் வெற்றித்தோல்வியின்று டிராவில் முடிந்தது.
    நியூசிலாந்து ஏ அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் விஜய் சங்கரின் அபார ஆட்டத்தால் இந்தியா ஏ அணி அசத்தல் வெற்றி பெற்றது. #NZAvINDA
    இந்தியா ‘ஏ’ அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிராவில் முடிந்த நிலையில் இன்று மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியது.

    டாஸ் வென்ற இந்தியா ‘ஏ’ அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. ரூதர்போர்டு (70), செய்பெர்ட் (59), நீஷம் (79 அவுட்இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து ‘ஏ’ 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் குவித்தது.

    309 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி 2-வது பேட்டிங் செய்தது. மயாங்க் அகர்வால், ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அகர்வால் 24 ரன்களிலும், ஷுப்மான் கில் 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 54 பந்தில் 54 ரன்களும், மணிஷ் பாண்டே 36 பந்தில் 42 ரன்களும் சேர்த்தனர். விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் 43 பந்தில் 47 ரன்கள் அடிக்க, ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் 80 பந்தில் 87 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா ‘ஏ’ அணி 49 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2-வது ஒருநாள் போட்டி டிசம்பர் 9-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 11-ந்தேதியும் நடக்கிறது.
    ×